தமிழ்நாடு

சே குவேரா மகள், பேத்தி சென்னை வருகை: மூத்த தலைவர்கள் வரவேற்றனர்!

17th Jan 2023 12:37 PM

ADVERTISEMENT

 

கியூபா புரட்சியாளா் சே குவேராவின் மகள் மற்றும் பேத்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை (ஜன.17) சென்னை விமான நிலையம் வந்தவர்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் வரவேற்றனர். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி பேராசிரியா் எஸ்டெஃபெனி குவேரா ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மூத்த தலைவா் டி.கே.ரங்கராஜன், சிஜடியு மாநில தலைவா் அ.சௌந்திரராஜன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT