தமிழ்நாடு

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

17th Jan 2023 02:09 PM

ADVERTISEMENT

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி   நகர்ப்புற வாழ்வு மையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அன்னப் பிளவு, உதடு பிளவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைந்து காதலர்களுக்கு பரிசளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரையும் கடைகளுக்கும் சீல வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நீடாமங்கலம், வலங்கைமானில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா

தமிழகத்திக் கரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளது. நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. புதிய ஒமைக்ரான் உருமாற்றம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளில் பரவி உள்ளது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT