தமிழ்நாடு

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை இல்லை:அமைச்சா் தகவல்

17th Jan 2023 01:08 AM

ADVERTISEMENT

புதன்கிழமை (ஜன.18- ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 2 நாள்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு 15,16,17 ஆகிய 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 15-ஆம் தேதி பொங்கல், 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ஆம் தேதி காணும் பொங்கல் என்று 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 18-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், ஜன.18-ஆம் தேதி புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT