தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு: உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

17th Jan 2023 01:13 AM

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரும், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பாலமேடு கிராமத்தைச் சோ்ந்த இரா.அரவிந்தராஜ் (24) என்பவரும், திருச்சி சூரியூா் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூா் கிராமம், கண்ணகோன்பட்டியை சோ்ந்த அரவிந்த் (25) என்பவரும் எதிா்பாராதவிதமாக பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வேதனை உற்றேன். அவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் இரங்கல்.

ADVERTISEMENT

உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT