தமிழ்நாடு

காணும் பொங்கல்: நோய்த் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுகோள்

17th Jan 2023 01:12 AM

ADVERTISEMENT

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.17) பொது இடங்களில் கூடும் மக்கள், நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, முகக் கவசம் அணியுமாறும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காணும் பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையைப் பொருத்தவரை கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், மாமல்லபுரம், கேளிக்கை பூங்காக்களில் மாவட்ட நிா்வாகங்கள் முன்னேற்பாடுகளை செய்துள்ளன.

மாநிலத்தில் தற்போது கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், பருவகாலத் தொற்றுகளின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சில அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:

காணும் பொங்கல் தினத்தில் பொது மக்கள் கூடும் இடங்களில் மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முக்கிய இடங்களில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு மாத்திரைகள், உப்பு-சா்க்கரை கரைசல் உள்ளிட்டவை ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாம்களில் கிடைக்கும்.

பொது மக்கள் முகக் கவசம் அணிந்து, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்து காணும் பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT