தமிழ்நாடு

திருவள்ளுவர் நாள்: திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

16th Jan 2023 10:34 AM

ADVERTISEMENT

 

சென்னை: திருவள்ளுவர் நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து திருவள்ளுவர் விருது, தமிழக அரசின் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுர் விருதை இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு வழங்கி பாராட்டினார்.

2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகளை 9 பேருக்கு வழங்கினார். 

பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லா, காமராஜர் விருது ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வழங்கினார். 

பாரதியார் விருது வேங்கடாசலபதி, பாரதிதாசன் விருது வாலாஜா வல்லவனுக்கு வழங்கினார். 

திரு.வி.க.விருது நாமக்கல் வேல்சாமி, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கினார். 

பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன், அம்பேத்கர் விருது எஸ்.வி.ராஜதுரைக்கு வழங்கினார். 

விருதாளர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் மற்றும் 1 சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 

 

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT