தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி: 3 சுற்றுகள் நிறைவு

16th Jan 2023 01:07 PM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையையொட்டி  புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.

முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்களுக்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 

இதனைத்தொடர்ந்து  ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகள் அடக்கும் பணியில் காளையர்கள் ஈடுபட்டுள்ளனர்.

3 ம்  சுற்று முடிவில் காயமடைந்தவர்கள் விபரம் 

ADVERTISEMENT

மாடுபிடி வீரர்கள் : 7

மாட்டு உரிமையாளர்கள்   : 4

பார்வையாளர்கள்  : 4

காவல்துறை :  1

பலத்த காயம் : 9

லேசான காயம் : 5

காவல் ஆய்வாளர் உட்பட மொத்தம்     : 16

மேல் சிகிச்சை : 3

--------------

முதல் சுற்று முடிவுகள்

மொத்த ஜல்லிக்கட்டு டோக்கன்: 1000

தகுதி பெற்ற காளைகள்: 105

தகுதி நிக்கம் செய்யப்பட்ட காளைகள்: 5

அவிழ்க்கப்பட்ட காளைகள்: 92

இதையும் படிக்க: பூஜ்ய டிகிரியில் நீடிக்கும் கடும் குளிர்: ராஜஸ்தானில் இயல்வு வாழ்க்கை பாதிப்பு!


ஜல்லிக்கட்டுப் போட்டியில்  மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் 500க்கும் மேற்பட்டோர்  குவிந்து உள்ளனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட எஸ்.பி சிவ பிரசாத் தலைமையில் 30 மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT