தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: இன்று முதல் சிறப்பு இணை பேருந்துகள் இயக்கம்

12th Jan 2023 03:00 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை (ஜன.12) முதல் 340 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்துக் கழக இயக்குநா் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சாா்பில் வெளியூா்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே.நகா் பேருந்து நிலையம் ஆகிய 5 பேருந்து நிலையங்களுக்கு மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், கூடுதலாக 340 சிறப்பு

இணைப்புப் பேருந்துகளை வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை (ஜன.14) வரையிலான மூன்று நாள்களுக்கு இயக்கப்படுகின்றன.

மேலும், பொங்கல் திருநாள் முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஜன.17, 18-ஆம் தேதி மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 பேருந்துகளும், ஜன.18, 19-ஆம் தேதி அதிகாலை 125 பேருந்துகளும் மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இயக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT