தமிழ்நாடு

தில்லி அதிகாரிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது பாஜக: சிசோடியா குற்றச்சாட்டு!

12th Jan 2023 04:02 PM

ADVERTISEMENT

 

ஆம் ஆத்மியை குறிவைக்கும் வகையில் தேசிய தலைநகரில் அதிகாரிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார். 

அரசு விளம்பரங்களில் வெளியிடப்பட்ட அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.163.62 கோடி செலுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

அதைத்தொடர்ந்து செய்தியாளகளிம் பேசிய சிசோடியா, 

ADVERTISEMENT

பாஜக முதல்வர்களின் விளம்பரங்கள் கூட தில்லியின் செய்தித் தாள்களில் வெளியிடப்படுகின்றன. அவர்களிடமிருந்து பாஜக பணத்தை வசூலிக்குமா? தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் தில்லி அரசின் அமைச்சர்களைக் குறிவைத்து தில்லி அதிகாரிகளை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு பாஜகவிடம் நான் கூற விரும்புகிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 

படிக்க: ஆளுநர் ரவி நாளை தில்லி செல்கிறார்!

அதில் என்ன சட்டவிரோதம் உள்ளதென்பதை அறிய டிஐபி செயலாளரிடம் கட்சி விளம்பரப் பட்டியலைக் கேட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

தில்லி அதிகாரிகள் மீதான அரசியல் சட்டத்திற்கு முரணான கட்டுப்பாட்டை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது நன்றாகத் தெரிகிறது. வெளி மாநிலங்களில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களின் விலையை முதல்வர் கேஜரிவாலிடம் வசூலிக்க நோட்டீஸ் அனுப்புமாறு தகவல் மற்றும் விளம்பர இயக்குநரகச் செயலர் ஆலிஸ் வாஸை பாஜக கேட்டுக் கொண்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT