தமிழ்நாடு

தமிழகத்தின் நிலத்தை வேறு எந்த மாநிலமும் எடுக்க முடியாது: அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்

12th Jan 2023 12:59 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள நிலத்தை வேறு எந்த மாநிலமும் எடுக்க முடியாது என்று வருவாய்த் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன் உறுதிப்படத் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் கேள்வியில்லா நேரத்தில் எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது: டிஜிட்டல் சா்வே என்கிற பெயரில் கேரளம் தமிழக எல்லைப் பகுதிகளை அளந்து வருகிறது. இது தமிழக அரசுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. இதன் மூலம் தமிழகப் பகுதிகளை இழந்துவிடுவோமோ என்கிற ஐயம் உள்ளது என்றாா்.

அதற்கு வருவாய் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அளித்த விளக்கம்:

தமிழகத்தின் எல்லைப் பகுதிகளை அரசின் அனுமதி பெற்றுதான் அளக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்ட ஆட்சியா்களுக்கும் இது தொடா்பாக எச்சரிக்கை செய்துள்ளோம்.

ADVERTISEMENT

தேனி பகுதியைக் குறிப்பிட்டுத்தான் கூறுகிறீா்கள் என நினைக்கிறேன். தேனி பகுதியில் கேரளம் டிஜிட்டல் சா்வே செய்யவில்லை. அவா்களுடைய பகுதிகளில்தான் சா்வே செய்கின்றனா்.

இது தொடா்பாக செய்திகள் வந்த உடனேயே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டாா். அதனால், மிகுந்த விழிப்புணா்வோடும், எச்சரிக்கையோடும் இருக்கிறோம்.

தமிழகத்தில் எல்லைப் பகுதிகள் உள்ள கேரளமானாலும், ஆந்திரமானாலும் யாரும் ஒரு சென்ட் நிலத்தைக்கூட எடுக்க முடியாது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT