புதுதில்லி: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 3 ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் 108 ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை(ஐஎஸ்சி) காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
ஆண்டுதொறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டாகளாக கரோனா தொற்று பரவல் கட்டுபாடு காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை.
இந்நிலையில், வரும் 3 ஆம் தேதி 108 ஆவது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, நாகப்பூரில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் மாநாடு ஜனவரி 7 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டும் இந்த மாநாடு, “மகளிருக்கான அதிகாரமளித்தலும் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” எனும் கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது.
நிலையான வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் இவற்றை அடைவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு போன்ற விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இதையும் படிக்க | கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம்: ஆட்சியர் அலுவலகம் எதிரே தர்னா
ஸ்டெம் என்று அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் கல்வி, ஆராய்ச்சி ஆகிவற்றில் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதற்கான வழிகளை கண்டறிவதோடு, கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் உயர் மட்டங்களில் பெண்களின் அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், பங்கேற்பார்கள் விவாதித்து ஆலோசிக்கிறார்கள்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில், புகழ்பெற்ற பெண் விஞ்ஞானிகளின் சொற்பொழிவுகளும் இடம்பெறுகிறது.
இந்திய அறிவியல் மாநாட்டை முன்னிட்டு ஏராளமான இதர நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. குழந்தைகள், மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக அறிவியல் மாநாடும் நடைபெறுகிறது.
உயிரியல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களிடையே விவசாயத்தை ஊக்குவிக்கவும் விவசாயிகளுக்கான அறிவியல் மாநாடு உகந்த தளமாக செயல்படும்.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துவதோடு, பழங்காலம் முதல் நம் நாட்டில் நிலவும் அறிவுசார்முறை மற்றும் நடைமுறைகளின் அறிவியல் சார்ந்த காட்சிமுறையை அறிவியல் மாநாடு பிரதிபலிக்கும்.
1914-ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் நடைபெற்றது. இந்த ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, 108-ஆவது இந்திய அறிவியல் மாநாடானது கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நாக்பூர் ராஷ்ட்ரா சாண்ட் துக்தோஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தில்(ஆா்.டி.எம்) நடைபெறுகிறது.