தமிழ்நாடு

புத்தாண்டு... அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை!

1st Jan 2023 04:17 PM

ADVERTISEMENT


ஆங்கில புத்தாண்டையொட்டி, பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
  
ஆங்கில புத்தாண்டையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் ஞாயிற்றுக்கிழமை வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

 

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி,  அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதையும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு

பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சென்றிருந்த அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், பி.கே. சேகர்பாபு ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT