தமிழ்நாடு

புத்தாண்டை வரவேற்கும் '2023' எண் கொண்ட மதுரை பரோட்டா!

1st Jan 2023 02:38 PM

ADVERTISEMENT

மதுரையில் பிரபல உணவகம், 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், 2023 என்ற எண்ணை பிரபலப்படுத்தும் வகையில் பரோட்டா தயாரித்து, புதிய ஆண்டை குறிக்கும் வகையில் 23 ரூபாய்க்கு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

ருசியான உணவுகளுக்குப் பெயர் பெற்ற மதுரையில் பரோட்டோ, கறி தோசை, பிரியாணி, மட்டன் முட்டைக்கறி, வெங்காயக்கறி, இலை பரோட்டா, பொரிச்ச பரோட்டா என பல வித விதமான உணவுகளுக்கு பிரபலமானது. 

இதில் மேலும் சிறப்பு சேர்க்கும்  மதுரையில் உள்ள பிரபல உணவகத்தில், 2023 ஆம் ஆண்டு பிறந்த நிலையில், 2023 என்ற எண்ணை பிரபலப்படுத்தும் வகையில் தயாரித்து, புதிய ஆண்டை குறிக்கும் வகையில் 23 ரூபாய்க்கு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

இதுகுறித்து உணவக நிர்வாகி நவநீதன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் ஏதாவது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் புரோட்டா தயாரித்து வருகிறோம். கரோனா காலகட்டத்தில் கரோனா மற்றும் முகக்கவச பரோட்டாவும், தமிழக முதல்வர் மஞ்சப்பை பிரபலப்படுத்தும்போது மஞ்சள் பை புரோட்டாவும், இந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் 23 ரூபாய்க்கு 4 புரோட்டாக்கள் வழங்கி வாடிக்கையாளர்கள் சிறப்பித்துள்ளோம் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ஈரோட்டில் உலக அமைதி தின வேள்வி!

வாடிக்கையாளர் கூறுகையில் நாங்கள் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் மதுரைக்கு வரும் போதெல்லாம் இந்த கடையில் வந்து புரோட்டா சாப்பிடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் விதவிதமான முறையில் புரோட்டா தயாரித்து பிரபலப்படுத்துவதில் மதுரையில் இந்த உணவகம் முன்னணியில் உள்ளது. மிகவும் ருசியாக இருப்பதால் தொடர்ந்து இங்கேயே வருகிறோம் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT