தமிழ்நாடு

ஆங்கிலப் புத்தாண்டு: தஞ்சை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

1st Jan 2023 12:32 PM

ADVERTISEMENT

புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கும், பெரியநாயகிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, எலுமிச்சை சாறு, கரும்புச் சாறு உள்ளிட்ட 9 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. 

இதையும் படிக்க: தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

ADVERTISEMENT

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,


 

ADVERTISEMENT
ADVERTISEMENT