தமிழ்நாடு

தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

1st Jan 2023 12:21 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன் ஐஏஎஸ், இணை அரசு செயலராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 45 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்தியபிரியா நியமிக்கப்பட்டு உள்ளார்.

ADVERTISEMENT

அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார் தாக்கூர், மகேஷ் குமார் உள்ளிட்ட 9 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  கல்பனா நாயகர், வன்னிய பெருமாள், பிரவீன் குமார் அபிநபு, பகலவன், மயில்வாகனன் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 'சம வேலைக்கு சம ஊதியம்': ஆய்வு செய்ய குழு

27 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT