தமிழ்நாடு

திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

DIN

அவிநாசி: திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மன நோய் தீர்க்கும் புனிதத் தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி தேர்த்திருவிழா முதல் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, விநாயகர் பிரார்த்தனை, மிருத்யங்க யாகம், அங்குரார்ப்பணம், ரிஷப யாகம் ஆகியவை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து விநாயகர், வள்ளி, தெய்வானை, திருமுருகநாதர், பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. முன்னதாக திருமுருகநாதசுவாமி கோயிலில் உள்ள கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டு, கொடித்துணியில், அதிகாரநந்தி, சூரியன், சந்திரன், அஸ்திர தேவர் ஆகியவை வரையப்பட்டு பூமாலை அணிவித்து, திருக்கொடிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட திருக்கொடியை எடுத்து கோயிலுக்குள் பிரகார உலாவந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, திருக்கொடியேற்றப்பட்டது. மேலும் மார்ச் - 4 ம் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.  மார்ச் - 5 திருக்கல்யாணம்  நடைபெறுகிறது. மார்ச் 6-ம் அதிகாலை மக நட்சத்திரத்தில், யாகவேள்வியுடன் சுவாமிக்கு, அபிஷேக அலங்கார மகாதீபாராதனைகள் நடைபெற்று, விநாயகர், திருமுருகநாதசுவாமி,  வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  

அன்று மாலை 3 மணிக்கு திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும், மார்ச் - 7ம் மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மார்ச் 8-ம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனம், சிம்ம வாகனக்காட்சிகளும், தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மார்ச் - 9ம் தேதி இரவு 7 மணிக்கு, ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும், மார்ச் 10 -ம் தேதி பிரம்ம தாண்டவ தரிசனக் காட்சியும், மார்ச்.27ம் தேதி மஞ்சள் நீர் திருவிழாவும் நடைபெற்று, இரவு மயில்வாகனக்காட்சியுடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது. தேர்த்திருவிழாவையொட்டி, திருக்கோவில் வளாகத்தில் கலையரங்கத்தில், தினமும் இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.விழா ஏற்பாடுகளை, திருமுருகநாதசுவாமி திருக்கோயில் தக்கார் பெரிய மருது பாண்டியன், செயல் அலுவலர் விமலா ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT