தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்: உதயநிதி

DIN

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் என பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தப் பிறகு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

தில்லி வரும்போது தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதனால், இன்று அவரை சந்தித்தேன்.

நீட் விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறினேன். நீட் தேர்வுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரும் என்பதை சுட்டிக்காட்டினேன். நீட் விலக்கு தொடர்பாக கேட்ட போது பிரதமர் சில விளக்கங்களை அளித்தார்.

கேலோ இந்தியா போட்டியை தமிழகத்தில் நடத்த வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். மேலும், தமிழகத்தில் மாவட்டம்தோறும் விளையாட்டுத் திடல்கள் அமைக்க நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தேன் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் வாக்குறுதிகளால் பயனில்லை: தமிழச்சி தங்கபாண்டியன்

நாம் தமிழா் கட்சிக்கு மக்கள் துணை தேவை சீமான்

ஜம்மு-காஷ்மீரில் பிகாா் தொழிலாளா் சுட்டுக்கொலை

போலி பாஸ்போா்ட் வழக்கு: வங்கதேசத்தவா் மூவா் கைது

ஏப்.21இல் மகாவீா் ஜெயந்தி : இறைச்சி கடைகளை மூட உத்தரவு

SCROLL FOR NEXT