தமிழ்நாடு

கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண நடவடிக்கை - ராணிப்பேட்டை மாவட்டத்தில்!

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் திறமையான புதிய இளம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சி அளித்து அடுத்த  கட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் சந்தோஷ் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் முதல் அறிமுகக் கூட்டம் மற்றும் முதல் நிர்வாகிகள் அறிமுக விழா பாரதி நகரில் உள்ள ஜி.கே. மில்லெனியா கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சங்கத்தின் முதல் நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். அதன்படி சங்க தலைமை புரவலர் டி.ஜெ.சீனிவாச ராவ், சங்க தலைவர் ஜி.சந்தோஷ் காந்தி, துணைத்  தலைவர்கள் மருத்துவர் எம்.பிரகாஷ், கே.ஆர்.நாராயண மூர்த்தி, டி.கே. குமார், எம். லட்சுமணன், கே.நடராஜன், செயலாளர் எஸ்.செல்வகுமார், துணைச் செயலாளர்கள் டி.எபினேசர், எஸ்.பாஸ்கர், பொருளாளர் கே.ஜெயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் டி.தேவா அன்பு, எஸ்.கணபதி, வி.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர். அப்போது சங்கத்தின் முதல் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சங்க தலைவர் ஜி.சந்தோஷ் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதிதாக உதயமாகியுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த  சங்கத்தின் முக்கிய குறிக்கோளாக கிராமப்புறங்களில் உள்ள திறமையாள புதிய இளம் கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பயிற்சி அளித்து மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளை விளையாட வைப்பதே முக்கிய நோக்கம். இதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட உதவியும், ஆதரவும் செய்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT