தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 70 புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய புலிகள் காப்பக ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன. இது தேசிய அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 70 புலிகள் இறந்துள்ளன.
புலிகள் சரணாலயத்தில் மட்டும் 44 புலிகள் இறந்துள்ளன. மற்றவை சரணலாயத்துக்கு வெளியே இறந்துள்ளன. புலிகள் இறப்பு விகிதத்தில் தமிழகம் தேசிய அளவில் 6-ஆவது இடத்தில் உள்ளது. புலி வேட்டையில் ஈடுபடும் கும்பலை தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளது.