தமிழ்நாடு

ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவு!

DIN

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு இரவு 9.20 மணியளவில் நிறைவு பெற்றது. 

ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்குள் வந்த 368 பேர் டோக்கன் பெற்றுக்கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து ஒருவர்பின் ஒருவராக வாக்களித்தனர்.

3 மணி நேரத்துக்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற்றதால், வாக்காளர்களுக்கு டீ, காபி வழங்கப்பட்டதுடன் இரவு சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் அதிக அளவிலான மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். இதனால், வரிசையில் நின்றிருந்த பெண்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்துக்கு மேல், வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பெண் காவலர்கள் வாக்காளர்களை சமாதானம் செய்து வாக்களிக்க வரிசைப்படுத்தி அனுப்பிவைத்தனர். 

வாக்குப்பதிவு நேரம் முடிந்து, டோக்கன் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ராஜாஜிபுரம் தொகுதியில் இரவு 9.20 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிட்டனர். ஈரோடு கிழக்கில் மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வாக்காளர்கள் தங்களது வேட்பாளர்களை 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேடி வாக்களிக்க கால தாமதம் ஆனதால், சில வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  எனினும் பெரும்பானால வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT