தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

27th Feb 2023 01:52 PM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இன்று(பிப். 27) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி  44.56 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் இதுவரை 1,01,392 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கில் மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்தத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிடுகின்றனா். 

இதையும் படிக்க | தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் குஷ்பு!

ADVERTISEMENT
ADVERTISEMENT