ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளிமாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன, வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார், 'ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளிமாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது. மாலை 5 மணியுடன் வெளிமாவட்ட நபர்கள் வெளியேறிவிட வேண்டும்.
ஈரோடு கிழக்கில் விதிமீறல் புகாரில் பரிசுப் பொருட்கள் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறை மீறல் பிரிவு 453-ன் கீழ் இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்றார்.
இதையும் படிக்க | உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 45 ஆயிரம் கோடி நிதியுதவி : ஜப்பான் அறிவிப்பு