தமிழ்நாடு

தனியார் மருத்துவமனையில்  கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

21st Feb 2023 03:08 PM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் மர்மமான முறையில்  கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ராஜபாளையம் அருகே பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் கார்த்திக்கேயன் (வயது 19). இவர் ராஜபாளையம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டு ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் குடல் இறக்கம் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென்று, கார்த்திக்கேயன் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை என அவரது உறவினர்கள்  மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

பின்னர்,  அரை மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கார்த்திக்கேயனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.  ஆனால் அரை மணி நேரத்தில் கார்த்திக்கேயன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் கார்த்திகேயனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக  தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: கோவை அருகே காட்டு யானை அட்டகாசம்: காட்டுக்குள் விரட்ட முயற்சி

மேலும், உயிரிழந்த கல்லூரி மாணவன் சடலத்தை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை முடிவில்  கல்லூரி மாணவன் இறப்பின் மர்மம் தெரியவரும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT