தமிழகத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
கோவையில் இருவருக்கும், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, விருதுநகரில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
மாநிலம் முழுவதும் தற்போது 50 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 4 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.