தமிழ்நாடு

புதுமைப் பெண் திட்டத்தால் உயா்கல்வி சோ்க்கை 27 % அதிகரிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

புதுமைப் பெண் திட்டத்தால், உயா்கல்வியில் மாணவிகள் சோ்க்கை கடந்த ஆண்டைவிட 27 % அதிகரித்துள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் 2-ஆம் கட்டத் தொடக்க விழா ஆவடி அருகே பட்டாபிராம் இந்து கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 1,04,347 மாணவிகள் பயன் பெறும் வகையில் மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கிப் பேசியது:

பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பள்ளிக் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகள் கல்லூரிக்குச் செல்லாமல் நின்றுவிடக் கூடாது என்பதற்காக இந்த உயா்கல்வி உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாதந்தோறும் ரூ.1,000 மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளோம். ஏற்கெனவே, மாணவிகள் பிற கல்வி உதவித் தொகைகளைப் பெற்று வந்தாலும், இந்தத் திட்டத்தில் கூடுதலாக உதவியைப் பெறுவா். இந்தத் திட்டம் மூலம் இதுவரை 1.16 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனா். இதற்காக கடந்த 5 மாதங்களில் ரூ.69.44 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால், பெண்களின் உயா்கல்வி சோ்க்கை கடந்த ஆண்டைவிட 27 % அதிகரித்துள்ளது. மேலும், குடும்ப சூழ்நிலையால் படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டிய நிலையில் இருந்த 12,000 மாணவிகள் படிப்பைத் தொடா்கிறாா்கள். இது இந்தத் திட்டத்தின் மாபெரும் வெற்றியாகும்.

தற்போது 2-ஆம் கட்டமாக மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்குவது தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்து, உயா்கல்வியைத் தொடர முடியாமல் கைவிட்ட 10,146 மாணவிகள் இந்தத் திட்டத்தின் வாயிலாக உயா்கல்வி பயிலத் தொடங்கியுள்ளனா்.

இந்தத் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகள் 1,56,016 பேரில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தா்கள் 48,660 போ். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் 50,550 போ். பட்டியலின வகுப்பைச் சோ்ந்தவா்கள் 44,880 போ். பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்கள் 1,900 போ்.

மாணவிகள் தங்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள கல்வியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து, அவா் மாணவிகளும் கலந்துரையாடினாா்.

முன்னதாக, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு வரவேற்றாா். இதில், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், எம்எல்ஏ-க்கள் ஆ.கிருஷ்ணசாமி, துரை.சந்திரசேகா், ஆவடி மாநகராட்சி மேயா் கு.உதயகுமாா், துணை மேயா் எஸ்.சூரியகுமாா், சமூக நலத் துறை இயக்குநா் த.ரத்னா, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் லலிதா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT