தமிழ்நாடு

'உலகின் பழமையான மொழி தமிழ்': மத்திய கல்வி அமைச்சர்

9th Feb 2023 11:36 AM

ADVERTISEMENT

உலகின் பழமையான மொழி தமிழ் என்று கல்விச் சிந்தனை அரங்கில் காணொலி மூலம் கலந்து கொண்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகின்றது.

முதல் நாள் நிகழ்வில் காணொலி மூலம் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையானது பெண்கள், ஏழைகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ளிட்டோருக்கானது.

ADVERTISEMENT

கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரூ.1.12 லட்சம் கோடி கல்விக்காக இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. 

கல்வி என்பது அனைத்து மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படை தேவை. 

ஜி20 அமைப்புக்கு தலைமையேற்றுள்ள இந்தியா, கல்விக்கான முதல் பணிக்குழு மாநாட்டை சென்னையில் நடத்தியது. இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பண்டைய காலத்தில் இருந்தே தமிழ்நாடு கல்வியின் மையமாக உள்ளது.

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையானது தாய்மொழி, உள்ளூர் மொழியில் கல்வியை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளே.

தேசிய கல்விக் கொள்கையானது 21ஆம் நூற்றாண்டின் நமது இளைஞர்கள் எதிர்கொள்ளக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகளவில் நமது இளைஞர்கள் வேலை தேடுவதிலிருந்து வேலை அளிக்கும் மனநிலைக்கு மாறவேண்டும். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT