தமிழ்நாடு

சட்டம் பயிலும் மாணவர்கள் கிராமங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்: யு யு லலித்

9th Feb 2023 12:06 PM

ADVERTISEMENT

சட்டம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கல்விச் சிந்தனை அரங்கில் பங்கேற்ற உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு யு லலித் பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகின்றது.

முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு யு லலித் பேசியதாவது:

சமூகத்தில் வாழ்வதற்கு பணம் என்பது அனைவருக்கும் கட்டாயம் தேவையான ஒன்று. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது. எனவே, நீங்கள் எதையாவது செய்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் ஒன்று உங்களுக்குத் தேவை. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'உலகின் பழமையான மொழி தமிழ்': மத்திய கல்வி அமைச்சர்

ஆகவே, இந்த சமூகத்திற்கு எதையாவது திருப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், கல்லூரிகளுக்கு பேராசிரியராக சென்று வருகிறேன். 

தற்போது சட்டம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களில் கட்டாயம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சட்டத்துறையில் இருப்பவர்கள் புதிய கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT