தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்!

9th Feb 2023 11:21 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது. 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். எனவே ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

நிகழாண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை (பிப்.9) திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

ADVERTISEMENT

படிக்க: தில்லி கலால் கொள்கை: 8வது நபரை கைது செய்தது அமலாக்கத்துறை!

அதன்பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்குக் கொண்டு வரப்பட்டு, காலை 9.20 மணிக்கு மூலவருக்கும் தொடர்ந்து சண்முகர், வெங்கடாசலபதி, வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளைத் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT