தமிழ்நாடு

மதங்களைப் பற்றி பேசக்கூடிய தேர்தல் அல்ல இது: சச்சின் பைலட்

DIN

2024 தேர்தலானது மதங்களை பற்றி பேசக்கூடியது அல்ல என்றும் மக்கள் பிரச்னையை பேச வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்தார்.

சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகின்றது.

முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு சச்சின் பைலட் பேசியதாவது:

நாடாளுமன்றத்திற்கு நான் முதன்முதலில் சென்றபோது, வேறு மாதிரியான மக்கள் அங்கிருந்தனர். விவாதங்கள் நடைபெற்றன. அதெல்லாம் தற்போது மாறிவிட்டது. எல்லா மாற்றங்களும் எதிர்மறையானவை என்று சொல்ல முடியாது. ஆனால், அனைத்தும் நேர்மறையானது அல்ல.

அரசியல் என்பது 24 மணிநேர வேலையில்லை என்று நினைப்பது தவறானது. நேரம், அர்ப்பணிப்பு மற்றும் இருப்பு ஆகியவை 24 மணிநேரமும் இருக்க வேண்டும்.

நீங்கள் சொல்லும் அனைத்து நல்ல விஷயங்களையும் உங்கள் குழந்தைகள் கேட்பார்கள். ஆனால், அவர்கள் பார்ப்பதைதான் பின்பற்றுவார்கள்.

நூற்றாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தவர்களைப் பற்றி பேசுவதற்கு நாம் அதிக நேரத்தை செலவிடுகிறோம். சுகாதாரம், கல்வி, வேலை குறித்து நாம் பேச வேண்டும். எதிர்காலத்திற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ராஜஸ்தானின் உள்ளாட்சித் தேர்தலில் 40 வயதுக்குள்பட்ட இளைஞர்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவர்களிடம்தான் ஆற்றல் உள்ளது.

2024 தேர்தல் முக்கியமான ஒன்று. இந்த தேர்தலில் கோயில், மசூதி, தேவாலயம், ஹிந்து, முஸ்லீம் என்று பேசாமல் உண்மையான மக்கள் பிரச்னையை பேச வேண்டும். நாட்டின் வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான அணியால் மட்டுமே முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT