கல்விச் சிந்தனை அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதிலளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகின்றது.
முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு கிரண் பேடி பேசியதாவது:
“புதுச்சேரிக்கு இன்னும் என்னால் நிறைய பங்களிப்பு செலுத்தியிருக்க முடியும். அரசியல்வாதிகள் எனக்கு முட்டுக்கட்டையாக இருந்தனர். ஆனால், நீதிமன்றங்கள் எனக்கு உதவியாக இருந்தன” என்றார்.
இதையும் படிக்க | ஓடிடி சினிமாவை முடித்துக்கட்டிவிடும்: அடூர் கோபாலகிருஷ்ணன்
மேலும், தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர், இல்லை எனப் பதிலளித்தார்.