தமிழ்நாடு

‘பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதியில்லை’: ஜேஎன்யு துணைவேந்தர்

9th Feb 2023 01:19 PM

ADVERTISEMENT

 

எதிர் கருத்துடையவர்கள் இருப்பதால் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று கல்விச் சிந்தனை அரங்கில் ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகின்றது.

முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு சாந்திஸ்ரீ பண்டித் பேசியதாவது:

ADVERTISEMENT

யாருடைய தனிப்பட்ட உரிமைகளையும் யாரும் கேள்வி கேட்பதில்லை. நிறுவனங்களில், எதிர் கருத்துடையவர்களும் இருப்பதால் திரையிடலை அனுமதிக்க முடியாது. 

இதையும் படிக்க | 'உலகின் பழமையான மொழி தமிழ்': மத்திய கல்வி அமைச்சர்

தமிழ் படிப்பிற்கான மானியம் கிடைத்துள்ளது. ஏற்கெனவே தொல்காப்பியம் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ரூ. 10 கோடி நிதி வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT