தமிழ்நாடு

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் அங்கி அணிவது கட்டாயமில்லை

DIN


சென்னை: வழக்குகளில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், அவர்களுக்கான அங்கியை அணிய வேண்டுமென்ற தேசிய கம்பெனி சட்ட வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், கட்டாயமாக வழக்குரைஞர்களுக்கான அங்கியை அணிய வேண்டும் என 14.11.2017}இல் தேசிய கம்பெனி சட்ட வாரிய பதிவாளர் உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.ராஜேஷ்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017} இல் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேசிய கம்பெனி சட்ட வாரிய விதிகளில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க எவ்வித அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், வழக்குரைஞர் அங்கி அணிய வேண்டுமென்று உத்தரவிட முடியாது எனவும், உச்ச நீதிமன்றம்,  உயர் நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்கள் மற்றும்  தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், அங்கி அணிவது கட்டாயமில்லை எனத் தெரிவித்தனர். 

மேலும், இது போன்ற விதிகளை வகுக்க உயர் நீதிமன்றத்துக்குதான் அதிகாரம் உள்ளது எனக் கூறி, 2017-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

முன்னதாக தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்குரைஞர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டை பொருத்தவரை இந்திய பார் கவுன்சில் விதிகள் பொருந்தும் என தேசிய கம்பெனி சட்ட வாரியம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT