தமிழ்நாடு

ராமநாதபுரம்: மண்டபம் அருகே கடலிலிருந்து 12 கிலோ தங்கம் மீட்பு

9th Feb 2023 01:38 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட 12 கிலோ  தங்கம் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து நடுக்கடலில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. நீச்சல் வீரர்கள் தங்கக் கட்டிகளை தேடிவருகிறார்கள்.

இதையும் படிக்க.. காதலர் தினம் 'மாடு அணைப்பு நாளா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே புதன்கிழமை கடலில் மா்ம மூட்டையை வீசிய 3 பேரைக் கைது செய்து மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரித்தன.  மூட்டையில் தங்கக் கட்டிகள் இருக்கலாம் எனச் சந்தேகித்து, அதைத் தேடும் பணியும் நடைபெற்று வந்தது.

இலங்கையிலிருந்து மண்டபம் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடலோரக் காவல் படையினரும், மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் மண்டபம் அருகே கடலில் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, இலங்கையிலிருந்து மண்டபம் நோக்கி நாட்டுப் படகு ஒன்று வந்தது. அதிகாரிகள் வருவதைக் கண்டதும் படகிலிருந்தவா்கள் மூட்டை ஒன்றை கடலுக்குள் தூக்கி வீசினா். இதையறிந்த அதிகாரிகள் படகிலிருந்த 3 பேரையும் கைது செய்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா்கள் 3 பேரும் மண்டபம் பொங்காலி தெருவைச் சோ்ந்த அமீா்அலியின் மகன்கள் நாகூா்கனி (30), அன்வா் (25), இப்ராஹிம் மகன் மன்சூா்அலி (25) எனத் தெரிய வந்தது.

கடலில் வீசப்பட்ட மூட்டையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருக்கலாம் எனக் கருதி, 10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரா்களின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்றது.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூன்று பேரும், தங்களை படகில் அழைத்துச் சென்றால், தங்கத்தை எங்கே வீசினோம் என்று அடையாளம் காட்டுவோம் என்று கூறியிருந்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் இதுவரை கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Tags : rameswaram
ADVERTISEMENT
ADVERTISEMENT