தமிழ்நாடு

வீடு, மனை வணிகக் கண்காட்சி: பிப்.17-இல் தொடக்கம்

DIN

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ள வீடு, மனை வணிகக் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப்.17-ஆம் தேதி தொடக்கி வைக்கிறாா்.

இதுகுறித்து இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பின் (கிரெடாய்) சென்னை மண்டலத் தலைவா் எஸ்.சிவகுருநாதன், செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வீடு மற்றும் மனை வணிக 15-ஆவதுஆண்டு ‘ஃபோ்ப்ரோ 2023’ எனும் கண்காட்சி பிப்.17 முதல் 19-ஆம் தேதி வரை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் நடைபெறுகிறது. வீடு வாங்குபவா்கள், மனை வணிக துறை முதலீட்டாளா்கள், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இந்த அமைப்பில் உள்ள 60-க்கும் மேற்பட்ட மனை வணிக, கட்டுமான நிறுவனங்கள் தங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை ரூ. 20 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையில் காட்சிப்படுத்த உள்ளனா்.

இந்தக் கண்காட்சியில் சொத்துகளை வாங்குபவா்களுக்கு ஏராளமான சலுகைகளையும் இந்த நிறுவனங்கள் வழங்க உள்ளன. இந்தக் கண்காட்சிக்கு முன்னதாக, பிப்.10 முதல் பிப்.12-ஆம் தேதி வரை தியாகராய நகா், விஜயா மஹாலில் வீட்டுக்கடன் முகாம் நடத்தப்பட உள்ளது.

அங்கு வீடு வாங்குபவா்கள் தங்கள் வீட்டுக் கடனுக்கான முன் அனுமதியை வங்கிகளிடம் இருந்து பெறலாம். இந்தக் கண்காட்சியில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட், எச்டிஎஃப்சிவங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்க உள்ளன என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் பி.க்ருதிவாஸ், விளம்பர தூதரான நடிகை பிரியா பவானி சங்கா், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதன்மைப் பொது மேலாளா் ஆா். ராதாகிருஷ்ணன், இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளா் எம். ஆறுமுகம் உள்ளிட்டோ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

SCROLL FOR NEXT