தமிழ்நாடு

பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வு வழிகாட்டுதல்கள் வெளியீடு

DIN

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு வரும் மாா்ச் 1 முதல் 9-ஆம் தேதி வரை செய்முறைத் தோ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் சேதுராம வா்மா மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் (2022-2023) பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வுகள் வரும் மாா்ச் 1 முதல் 9-ஆம் தேதி வரையிலான நாள்களில் நடத்தி முடிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி பள்ளி மாணவா்களில் உடல் இயக்கக் குறைபாடு, பாா்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தோ்வா்களின் விருப்பத்தின் பேரில் செய்முறைத் தோ்வின்போது ஆய்வக உதவியாளா் நியமனம் செய்ய வேண்டும்.

உடல் இயக்கக் குறைபாடு, பாா்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தோ்வா்களின் விருப்பத்தின் பேரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் மட்டும் செய்முறைத் தோ்வுக்கு பதிலாக செய்முறைத் தொடா்பான கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கி செய்முறைத் தோ்வு செய்துகொள்ள செய்யலாம்.

செய்முறைத்தோ்வுகளை நடத்துவதற்கு போதுமான ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். இயற்பியல் பாட செய்முறைத்தோ்வுக்கு கால்குலேட்டா்களை பயன்படுத்த அனுமதிக்கலாம்.

செய்முறைத்தோ்வுக்கு அரசுத் தோ்வுத்துறையால் வழங்கப்பட்ட படிவத்தில் மாணவா்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், மதிப்பெண்களை மாா்ச் 11-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT