தமிழ்நாடு

கூடலூர் பகுதியில் வீடுகளைச் சுற்றி வலம்வரும் காட்டு யானைகளால் பரபரப்பு

DIN




கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை வலம்வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் அன்மை காலங்களாகவே காட்டு யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.

விவசாயிகளின் தோட்டங்களில் பகல் நேரங்களில் முகாமிடும் யானைகளால் இதுவரை பல விவசாயிகளும் தொழிலாளர்களும் யானைகள் தாக்கி பலியாகியுள்ளனர். விளைபயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. அவ்வப்போது குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், தேவர்சோலை அடுத்துள்ள செம்பக்கொல்லி கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை அங்குள்ள காப்பித் தோட்டத்தை சுற்றி வலம் வந்தது. அந்த பகுதி விவசாயிகள் விடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தனர். யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT