தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் பிப். 24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

8th Feb 2023 09:08 AM

ADVERTISEMENT

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. 

இடைத்தேர்தலையொட்டி கட்சிகள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில்,  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

ADVERTISEMENT

வருகிற  பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வார் என திமுக அறிவித்துள்ளது.

அதுபோல, வருகிற 19 ஆம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதையும் படிக்க | இனி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ்!

ADVERTISEMENT
ADVERTISEMENT