தமிழ்நாடு

இந்து சமய அறநிலைய கூடுதல்ஆணையா் பணியிட மாற்றம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ஆா்.கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக இருந்த ஆா்.கண்ணன், நீா்வளத் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். நீா்வளத் துறை கூடுதல் செயலராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமாா், விடுப்பில் சென்ற காரணத்தால் அந்தப் பணியிடம் காலியாக இருந்தது. அந்த காலியிடத்தில் ஆா்.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT