தமிழ்நாடு

வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம்

DIN

கடலூர் மாவட்டம், வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தில் திரு அருட்பிரகாச வள்ளலார் சித்திபெற்ற தினத்தை முன்னிட்டு திருஅறை தரிசனம் நடைபெற்றது. 

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152-ஆவது ஆண்டு தைப்பூச திருவிழாவில் ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதனையொட்டி  வடலூர் சத்திய ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழை மற்றும் வள்ளலார் உருவப்படம் பூக்களால் அலங்கரித்து, வள்ளலார் நடந்து வந்த பாதை வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.

இந்த பல்லக்கை கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர்கள் தங்களது தோளில் வைத்து சுமந்தபடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேட்டுக்குப்பத்துக்குச் செல்லும் வழியில் வடலூர், பார்வதிபுரம் கிராம மக்களும், செங்கால் ஓடையில் நைனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அதைத்தொடர்ந்து கருங்குழி கிராமத்தினரும் பூக்கள் பழங்கள் உடன் வரவேற்றனர். 

கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவில், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த இல்லம், வள்ளலார் வழிபாடு செய்த லட்சுமி நாராயணபெருமாள் கோவிலிலும் வரவேற்பு அளிக்கப்பட்டன. 

தொடர்ந்து மேட்டுக்குப்பம் தீஞ்சுவை ஓடையில் உள்ள மண்டபத்தில் கருங்குழி கிராம பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டன. பின்னர் மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திபெற்ற திருவறை உள்ள சித்தி வளாக திருமாளிகை கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் வள்ளலார் சித்திபெற்ற திருஅறையினுள் வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து திருஅறை தரிசனம் தொடங்கியது. மதியம் 12 மணி அளவில் தொடங்கிய தரிசனம் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT