தமிழ்நாடு

குடிசைகளுக்கும் விரைவில் வருகிறது மின்சார மீட்டர்!

DIN

குடிசை வீடுகளுக்கு விரைவில் மின்சார மீட்டர் பொருத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி,  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணிகள் நிறைவடைந்ததும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிசை  இணைப்புகளுக்கும் மின்சார மீட்டர்களை தமிழ்நாடு மின்சார வாரியம் பொருத்தும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 9.44 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகள் இருந்தாலும், பல ஆண்டுகாலமாக இந்த இணைப்புகளுக்கான மின் நுகர்வு கணக்கிட மீட்டர்கள் பொருத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது என்று கூறும் மின்வாரிய அதிகாரி,  தற்போது, மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று அனைத்து மின் இணைப்புகளிலும் மீட்டர் பொருத்தபடவிருக்கிறது என்கிறார்.

ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே இந்த பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆதார் இணைக்கும் பணிகள் பிப்ரவரி 15-ம் தேதியுடன் முடிவடையும் என்றும், அதன்பிறகு, மாநில அரசு கொள்கை முடிவு எடுத்து, குடிசைவீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கு மீட்டர்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

பிஎம்எஸ் (மின்சாரப் பொறியாளர்கள் பிரிவு) மாநில பொதுச் செயலாளர் இ நடராஜன் இதுபற்றி கூறியதாவது: பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு சில குடிசை இணைப்புகளில் மின்வாரியத்தினர் மின்சார மீட்டர் பொருத்தியுள்ளனர். இருப்பினும், மின் நுகர்வு அளவீடுகள் எடுக்கப்படவில்லை, இதனால் மின்சார வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டது. “பிரச்னை என்னவென்றால், குறிப்பாக கிராமப்புறங்களில் மின் இணைப்பு மீட்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அனைத்து இணைப்புகளுக்கும் மீட்டர்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய, மின்சார வாரியம் விரைவில் மின்சார மீட்டர்களை கொள்முதல் செய்ய வேண்டும்,'' என்றார்.

டிஎன்இஆர்சி (TNERC) முன்னாள் உறுப்பினர் எஸ் நாகல்சாமி, "குடிசை" என்பது 250 சதுர அடிக்கு மேல் மண் சுவர் மற்றும் ஓலைக் கூரை, ஓடுகள், கல்நார் மற்றும் உலோகத் தாள்கள் கொண்ட வாழும் இடம் என்று கூறினார். 

குடிசை இணைப்புகளுக்கு ஒரே ஒரு 40 வாட் விளக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிசைவாசிகளுக்கு வண்ண தொலைக்காட்சி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் மற்றும் லேப்டாப் போன்ற உபகரணங்களை அரசு வழங்கும் போது, கூடுதலாக மின்சாரம் வழங்க அனுமதிக்கப்படலாம். 

இந்த விதிமுறைகளை மீறும் போதெல்லாம், குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கு உடனடியாக குறை அழுத்த கட்டணம் 1-A இன் கீழ் கொண்டு வந்து அதற்கேற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT