தமிழ்நாடு

ஈரோடு மணல்மேடு பகுதியில் பிரசாரத்தை தொடக்கிய அதிமுக வேட்பாளர்

DIN


ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி ஈரோடு மணல்மேடு பகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு இன்று பிரசாரத்தைத் தொடக்கினார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோல் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதன் காரணமாக கடந்த 3ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதிமுகவினர் பிரசாரத்தையும் தொடங்காமல் இருந்து வந்தனர். 

எனினும் முக்கிய அமைப்பினர், விசைத்தறியாளர்கள், வணிகர் சங்க பேரமைப்பினரை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே. வி.இராமலிங்கம், கருப்பணன்  ஆகியோர் தலைமையில்  அதிமுகவினர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர். 

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை அவைத்தலைவர் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 2,501 அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தை அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் நேற்று  தேர்தல் ஆணையத்தில் வழங்கினார். இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறினார். இதனால் நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது. 

இதனையடுத்து இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் கேஎஸ் செங்கோட்டையன், கேவி ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். 

முதலில் அந்த பகுதியில் உள்ள முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு அதிமுகவினர் பிரசாரத்தை தொடங்கினர்.

வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து  இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். மற்ற அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் அதிமுக சார்பில் இன்று முதல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக பிரசாரத்தில் கூட்டணி கட்சியான தமாகாவைச் நிர்வாகிகள் விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT