தமிழ்நாடு

மின் வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரி: விடியோ வைரல்!

7th Feb 2023 10:01 AM

ADVERTISEMENT

இளம்பிள்ளை அருகே உள்ள மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் துணை மின் நிலையம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உதவி பொறியாளர் அலுவலகம்,  இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட  கே.கே.நகர் பகுதியில் இயங்கி வருகின்றது. இங்கு  விசைத்தறி, விவசாய, வீடு, கடைகள் உள்ளிட்ட மின் இணைப்பு பெற வரும் பொது மக்களிடம் அதிகம் லஞ்சம் வாங்குவதாக தொடர் புகார் எழுந்துள்ளது. 

இதையும் படிக்க: விக்டோரியா கௌரி நியமனம்: அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில் கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும்  ஜெயக்குமார் (போர்மேன்) என்பவர், மின் இணைப்பு பெற வரும் நபர்களிடம் லஞ்சம்  வாங்கும்  விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி பரவி வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT