பனிமூட்டம் காரணமாக பெங்களூரு, மும்பையிலிருந்து சென்னை வந்த 2 விமானங்கள் அரை மணி நேரம் தாமதாக வந்தடைந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் வழக்கத்தை விட கடும் பனிமூட்டம் நிலவியது.
சென்னை வந்த விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறங்க முடியாமல் சுற்றிய நிலையில் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டது.
தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.
இதையும் படிக்க: 8 நாள்களில் அதானி குழுமம் இழந்தது ரூ. 10 லட்சம் கோடி! இன்று என்ன?
இதனால், காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன.