தமிழ்நாடு

2022-ல் தமிழ்நாட்டில் 5000 பேர் பலி! கரோனா, எய்ட்ஸ் காரணம் அல்ல, காசநோய்!

7th Feb 2023 09:36 AM

ADVERTISEMENT


நீரிழிவு நோயாளிகள், தங்களது ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் அடிக்கடி காய்ச்சல், இருமல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும். இந்த அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் தாமாக முன் வந்து காசநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்கிறார் டாக்டர் ஆஷா.

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் பாதித்த நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கும் பணியை தன்னார்வல அமைப்புகள் தொடங்கியிருக்கின்றன.

இதையும் படிக்க.. பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?

காசநோய்க்கான அறிகுறிகளை கண்டறிவதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. வீடுகள்தோறும் சென்று பரிசோதனை செய்து, அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களுக்கு காசநோய் பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்கிறார் மருத்துவர் ஆஷா.

ADVERTISEMENT

அவர்கள் காசநோய் பரிசோதனைக்கு பரிந்துரைத்து, பரிசோதனையில் காசநோய் உறுதி செய்யப்பட்டால், ரூ.500 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இதையும் படிக்க.. கேரளத்தில் முதல் முறை.. தாயாகியிருக்கும் திருநம்பி

சுகாதாரத் துறை ஊழியர்களும், மாநிலத்தின் இதர பகுதிகளிலும் சோதனை செய்து, காசநோய் பாதிப்புகளை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் டாக்டர் ஆஷா.

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் சுமார் 5000 பேர் பலியாகியருக்கிறார்கள். கரோனாவுக்கு அல்ல.. சப்தமே இல்லாமல் பரவி வரும் காசநோய்க்கு என்ற அதிர்ச்சித்த தகவலையும் ஆஷா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க.. சென்னையில் மீண்டும் டிராம் ரயில்கள்?

காசநோயால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க வேண்டும் என்றால், காசநோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் மருத்துவர்களுக்கும் காசநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். காசநோய் பாதித்த நோயாளிகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு பரிசோதனைக்கு பரிந்துரைக்க இது பேருதவியாக இருக்கும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் காசநோய் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைவசதிகள் ஏற்படுத்தப்பட்டு, காசநோய் கண்டறிபவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆஷா வலியுறுத்துகிறார்.

இதையும் படிக்க.. விக்டோரியா கௌரிக்கு எதிரான வழக்கை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த திட்டம் தொடங்கிய போது, நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே கண்டறிய முடிந்தது. ஆனால் தொடர் பயிற்சி மற்றும் நடவடிக்கை காரணமாக, தற்போது ஆரம்பகட்டத்திலேயே பல நோயாளிகள் கண்டறியப்பட்டு உடனடியாக சிகிச்சை தொடங்கப்படுகிறது என்கிறார் டாக்டர் ஆஷா.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT