தமிழ்நாடு

எஸ்சி, எஸ்டி நலத்திட்ட உதவிகள் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

DIN

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
நிதியுதவி, வேலைவாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் கல்வி உதவித் தொகை ஆகியவை எவ்வித தாமதமின்றி வழங்க வேண்டும்.  ஆதிதிராவிடர், பழங்குடியின நலப் பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக நில நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்

பிரதம மந்திரி முன்னோடி கிராம திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தி பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை சேர்த்து வாரிய உறுப்பினர்களின் தேவைகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT