ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அவரை தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேமநாராயணன் ஈரோட்டில் நேற்று சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
இதையும் படிக்க: உலகிலேயே மிக உயரமான முருகன் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்!
அதைத்தொடர்ந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியில் தனக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார்.