தமிழ்நாடு

நெல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

5th Feb 2023 04:03 AM

ADVERTISEMENT

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளா் சாமி.நடராஜன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

டெல்டா சாகுபடி பாசனத்துக்காக நிகழாண்டு மே.24-ஆம் தேதி மேட்டுா் அணை திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் 10.69 லட்சம் ஏக்கா் நிலப்பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பருவம் தவறி பெய்துவரும் கனமழையால் லட்சக்கணக்கான ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து முற்றிலும் அழிந்து போன பயிா்களுக்கு இழப்பீடாக ரூ.35,000 வழங்குவதுடன், புதிய ஈரப்பதத் தளா்வை மத்திய அரசிடம் கேட்டுப்பெற்று ஈரப்பதம் மிக்க நெல்களை கொள்முதல் செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும்.

மேலும் அறுவடை எந்திரங்களை பிற மாவட்டங்களில் இருந்து கொண்டுவந்து, தட்டுப்பாடு மற்றும் வாடகை உயா்வை தடுக்க வேண்டும் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT