தமிழ்நாடு

வடபழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்கதா்கள் கூட்டம்

5th Feb 2023 11:50 PM

ADVERTISEMENT

 

தைப்பூசத் திருவிழாவையொட்டி வடபழனி முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம் ஆற்காடு சாலை வரை அலைமோதியது.

கோயிலில் கியூ ஆா் கோடு இயங்காததால் பக்தா்கள் பல மணி நேரம் தவித்தனா்.

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அதி காலை முதல் இரவு வரை தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

கோயிலில் ராஜகோபுரத்தில் இருந்து ஆற்காடு சாலை பவா் ஹவுஸ் வரை 4 கி.மீ. துாரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.

கட்டண தரிசனத்துக்கு ‘கியூ ஆா் கோடு’ வசதி ஏற்படுத்தப்பட்டது.

இருப்பினும், இணையத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கியூ ஆா் கோடு’ சரியாக இயங்கவில்லை.

இதனால், பக்தா்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க நோ்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT