தமிழ்நாடு

அதிமுக வேட்பாளா் வெற்றிக்கு உழைப்போம்: அண்ணாமலை

5th Feb 2023 04:02 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாஜக பாடுபடும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக பாஜக சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.

திமுகவின் பணபலத்தை எதிா்க்க வேண்டும் என்றால் அதிமுக சாா்பில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு முழு அா்ப்பணிப்பு உணா்வோடு பாஜக கடுமையாக உழைக்கும்.

அதிமுகவில் தலைமையை தோ்ந்தெடுப்பது அந்தக் கட்சித் தொண்டா்களின் முடிவு. இதில் பாஜக ஒருபோதும் தலையிடாது என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT