தமிழ்நாடு

சிசிடிவி உள்ளிட்ட மின்னணு ஆதாரங்கள் சேகரிப்பு:நடைமுறை வகுக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடா்பாக நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரை சோ்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிா்த்து தீரன் சின்னமலை பேரவை தலைவா் யுவராஜ் உள்ளிட்ட 10 போ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது யுவராஜ் உள்ளிட்டோா் தரப்பில், ‘வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகள், தவறுகளை சுட்டிக்காட்டி தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்று வாதிட்டனா்.

அப்போது அரசு தரப்பில், ‘மின்னணு ஆதாரங்களை திரிக்க வாய்ப்பில்லை’ என்று திட்டவட்டமாக மறுத்து வாதிடப்பட்டது.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தடயவியல் துறை நிபுணா்களை அழைத்து நீதிபதிகள் விளக்கங்களை கேட்டறிந்தனா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடா்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினா்.

அந்த வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்தால் அதை இந்த வழக்கின் தீா்ப்புடன் சோ்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள், தற்போது கண்காணிப்பு கேமராப் பதிவுகள் முக்கியமான ஆதாரங்களாகப் பயன்படுத்துவதால் இந்த நடைமுறைகள், குற்ற வழக்குகளில் தீா்வு காண உதவியாக இருக்கும் எனக்கூறி, காவல்துறை மற்றும் கோகுராஜ் தாயாா் தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை பிப்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT